Monday, October 14, 2024

Happy Birthday Jayanthi- Poem by Sathu

 


Dear Jayanthi, wishing you a happy birthday 🎂🎈 

As you are sharing your birthday with our beloved Dr Abdul Kalam sir, this is to celebrate both of you.


கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கலாம் 

பாறைக்குள்ளும் வேர்கள் முளைக்கலாம்

தீக்கனலிலும் பூ மிதிக்கலாம் 

ஆழ்கடலிலும் அமைதி கிடைக்கலாம்.


காலம் நமக்கு அருமருந்தாகலாம்

நமது துயர்கள் யாவும் கடந்து போகலாம்

பெற்ற மக்கள் என்றும் துணையாகலாம் 

அன்பு உறவுகள் யாவும் கரம் கோர்க்கலாம் 

இனிய நட்பு நமக்கு தோள் கொடுக்கலாம் 


போர்க்களத்திலும் அன்பை விதைக்கலாம்

யார் மனதிலும் கருணை பூக்கலாம்

வண்ணப் பட்டாம்பூச்சி சிறகடிக்கலாம்

இருளின் திறை மறைந்து, புதிய விடியல் உதிக்கலாம் .


இறையருள் என்றும் நற்றுணையாகலாம்

வரும் நாட்கள் யாவும் இனிமையாகலாம் 

புத்தம் புதிய பூமி நமது வசமாகலாம்

அதில் நாமும் வாழ்ந்து பார்க்கலாம்

             மீண்டும் வாழ்ந்து பார்க்கலாம்.     


Poem by Sathu

No comments:

Post a Comment

Happy Birthday Jayanthi- Poem by Sathu

  Dear Jayanthi, wishing you a happy birthday 🎂🎈  As you are sharing your birthday with our beloved Dr Abdul Kalam sir, this is to celebra...